துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர்கள் சந்திப்பு : முனைவர் தாவூத் பாட்சா - எம். அக்பர் கான் - பேராசிரியர் கலந்தர் பங்கேற்பு - வணிகத்துறையில் முத்திரை பதிக்கும் சாதிக் காக்காவிற்கு விருது
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர்கள் ( http://uaejmcalumni.blogspot.com ) சந்திப்பு நிகழ்ச்சி 04.09.2008 வியாழன் மாலை துபாய் தேரா லேண்ட் மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
ஈடிஏ ஸ்டார் பள்ளிகளின் இயக்குநர் பேராசிரியர் கலந்தர் தலைமை தாங்கினார். அனஸ் இறைவசனங்களை ஓதினார். ஹமீதுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பேராசிரியர் கலந்தர் அவர்கள் தனது தலைமையுரையில் 1950 ஆம் ஆண்டு 12 ஆசிரியர்களுடனும் 250 மாணவர்களுடனும் துவங்கப்பட்ட கல்லூரி இன்று 220 ஆசிரியர்களுடனும், 160 அலுவலகப் பணியாளர்கள் மற்றும் 7200 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ளது என்றார். இத்தகைய சிறப்புக்கு முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்றார். படித்தோம், பணிபுரிந்தோம், உதவுவோம் எனும் நோக்கத்தைக் கொண்டவர்களாக நாம் திகழவேண்டும் என்றார்.
துவக்கவுரையாற்றிய அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுச்செயலாளர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது உரையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கல்லூரியில் பழைய மாணவர் தினம் அனுஷரிக்கப்படுகிறது. இவ்வாண்டு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், டாக்டர் ஹிமானா சையத், ஜித்தா அப்துல் மாலிக் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றதை நினைவு கூர்ந்தார். இதுபோன்ற சமயத்தில் தாயகம் செல்லும் மாணவர்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்க கேட்டுக் கொண்டார்.
வரும் ஆண்டில் துபாயில் அனைத்து நாடுகளின் ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் சந்திப்பு ஒன்றிற்கு ஜித்தா அப்துல் மாலிக் ஏற்பாடு செய்து வருவதைக் குறிப்பிட்டார்.
பழைய மாணவர்களான தாவூத் பாட்சா, அப்துல் கத்தீம் உள்ளிட்டோர் கல்லூரிக்கு ஆரமப்த்தில் அர்ப்பணித்த கட்டிடத்தின் (எம்.எம்.இஸ்மாயில் பிளாக்) காரணமாக இன்று கல்லூரி வளாகத்தில் பழைய மாணவர்கள் தங்களது பங்களிப்புடன் அதிக அளவில் கட்டிடங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவ்வாண்டு நடைபெற்ற நிகழ்வில் அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா அவர்கள் வணிகத்துறையில் சிறந்து விளங்கி வருவமைக்காக விருந்து வழங்கப்பட்டது. அதனை பேராசிரியர் கலந்தர் அவர்கள் வழங்க சாதிக் காக்கா சகோதரர் ஹாமிம் மற்றும் அவரது புதல்வர் பெற்றுக் கொண்டனர்.
ஏற்புரை நிகழ்த்திய சாதிக் காக்கா புதல்வர் தனது தகப்பனார் ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற காலம் தனது வாழ்வின் பொற்காலம் எனக் கூறியதைக் குறிப்பிட்டார். அங்கு பெற்ற படிப்பினைகளை தினமும் தங்களுக்கு கூறி வருவதைக் குறிப்பிட்டார்.
சிறப்புச் சொற்பொழிவாளர் முனைவர் தாவூத் பாட்சாவிற்கு ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மனிதவள மேம்பாட்டுத்துரை எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் எம். அக்பர் கான் பொன்னாடை அணிவித்தார்.
சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்திய ராஜகிரி தாவூத்பாட்சா கல்லூரி நிறுவன தாளாளர் முனைவர் தாவூத் பாட்சா அவர்கள் தனது உரையில் ஜமால் முஹம்மது கல்லூரி என்ற நிறுவனம் உருவான வரலாற்றை எடுத்துரைத்தார். இக்கல்லூரி உருவாகக் காரணமாய் அமைந்த ஜமால் முஹம்மது, காஜா மியான் உள்ளிட்டோரை நினைவு கூர்ந்தார். மேலும் சமுதாயக் கல்வி நிறுவனங்கள் உருவாகக் காரணமாய் இருந்த கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத், ஜஸ்டிஸ் பஷீர் அஹமத் சையித், மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர், அதிராம்பட்டினம் காதர் முகைதீன் உள்ளிட்டோரையும் நினைவு கூறத்தவறவில்லை.
ஜமால் முஹம்மது கல்லூரி என்ற ஒன்று உருவானதன் காரணமாய் நம்போன்ற எண்ணற்றோர் இன்று பணிபுரிந்து கொண்டிருக்கிறோம். நான் கல்லூரி உருவாக்க காரணமாய் இருந்ததும் ஜமால் முஹம்மது கல்லூரி தான். பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்திய அவர் குறைந்த பட்சம் அவர்கள் ஆசிரியக் கல்வி பெறுவதற்காவது நாம் துணை நிற்க வேண்டும் என்றார். மேலும் கல்லூரி முதல்வர் ஷேக் முஹம்மது, நிர்வாகத்தினர், கல்லூரி தேர்வாணைக்குழு நெறியாளர் பேராசிரியர் டாக்டர் எம்.எம். ஷாகுல் ஹமீது ( MMS )உள்ளிட்டோரின் சேவைகளை இங்கு நினைவு கூர்ந்தார்.
நிறைவாக இறைவன் தமக்கு வழங்கியதை கொடுப்பதன் மூலம் நாம் அதிகதிகம் பெறக்கூடியவர்களாக உயர்வோம் எனக்கூறி தமது உரையினை நிறைவு செய்தார்.
முதுவை ஹிதாயத் நன்றி கூற இரவு விருந்திற்குப் பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம். அப்துல் ரஹ்மான், ஜாபர் சித்திக்,முதுவை ஹிதாயத், ஹாஜா முஹ்யிதீன், ஃபாயஸுதீன், ஹபிபுர் ரஹ்மான், அப்துல் காதர், கமால் பாஷா, அபுதாஹிர், நிஸார், ஹலீம், சையத் இப்ராஹிம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். நிகச்ச்சியில் ஈமான் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹ்யித்தீன், கவிஞர் அப்துல் கத்தீம், முஹம்மது ஃபாரூக், எமிரேட்ஸ் அப்துல் லத்தீப், அபுதாபி மலுக் முஹம்மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பழைய மாணவர் சங்க நிர்வாகிகள் தங்களது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஒரு முக்கிய வேண்டுகோள் :
நன்கு மதிப்பெண்கள் பெற்று நம் கல்லூரியில் சேரும் மிகவும் ஏழ்மையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ( EDUCATIONAL SCHOLARSHIP ) அளிக்கும் உயரிய திட்டத்தில் நம் அனைவரும் பங்கு கொண்டு இறைவனின் பேரருள் பெற அன்புடன் வேண்டுகிறோம்.
தொடர்புக்கு :
ஜாபர் சித்தீக் : 050 5489 609
செய்திகள் வெளியான இதழ்களின் இணைப்புகள்
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0829-trichy-jmc-alumni-meet-in-dubai.html
http://www.adhikaalai.com/index.php?/en/?????????/?????-???????/??????-??????-????????????-??????
http://yahind.com/articles/directory.php?id=575
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=1094&Country_name=Gulf&cat=new
http://www.uaejmcalumni.blogspot.com/
http://muduvaihidayath.blogspot.com/2008/09/blog-post_1180.html
http://www.jmc.edu/archives2007-08/dubai.html
கல்லூரி இணையத்தளம்
http://www.jmc.edu/
துபாயில் இன்று திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று 04 செப்டம்பர் 2008 வியாழன் மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள ஹோட்டல் லேண்ட்மார்க்கில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
சிறப்பு விருந்தினராக அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிறுவனர்களில் ஒருவரும், பாபநாசம் ஆர்.டி.பி. கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் முனைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா, ஈடிஏ ஸ்டார் சர்வதேசப் பள்ளிகளின் கல்வி இயக்குநர் பேராசிரியர் எஸ்.எம். கலந்தர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்ட அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்.
இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களுக்குத் தெரிந்த பழைய மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முன்னாள் மாணவர் சங்கத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள 050-5489609/050-5356650 எனும் தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
The Organizing Committee of
Alumni of Jamal Mohamed College
UAE Chapter
has the pleasure to invite all the Jamalians to
A Grand IFTHAR Party
Guest of Honour
Dr. M.A. Dawood Batcha
(Founder Patron - JMC Alumni, UAE Chapter)
(Founder & Chairman, RDB College, Papanasam)
Prof. S.M. Khalanthar
(Director of Education – SEMS Group)
(ETA Star International Schools, U.A.E)
will preside over the function
Venue: Landmark Hotel, Level-1
(Nasser Square, Deira, Dubai)
Date: 4th Sep 2008 (Thursday) at 06:00 pm
"We meet to reminisce our college days"
"Your pleasing presence will be cherished by each one of our fellow Jamalians"
For further information, please contact 050-5489609/050-5356650
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment